மோஷன் டெஸ்ட்டும் / வாளியும்
வெகு நாட்களாக இடுகை எதுவும் எழுதவில்லை (ஏண்டா எழுதல என்று யாரும் கேட்கப் போவதுமில்லை!)
சேட்டை படத்தில் வந்த காட்சியை பார்த்ததும் இதைவிடவும் ஒரு மோசமான நிகழ்வுதான் நினைவுக்கு வந்தது, சிறுநீரோ, மலமோ பரிசோதனை செய்ய பரிசோதனை நிலையத்தில் ஒரு சிறிய கண்ணாடி குப்பி தருவார்கள், சில பரிசோதனை நிலையத்தில் அவர்கள் தரும் பாட்டிலை தவிர்த்து நாமாக ஏதேனும் பாட்டிலில் கொண்டு சென்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இப்போதுதான் தெருவுக்கு ஒரு பரிசோதனை நிலையம் என்று வந்துவிட்டது.
அவர் இரத்த பரிசோதனை கூடத்தில் வேலைபார்த்தார். அப்பொழுது ஒருவர் ஒரு வாளியை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். நண்பரும் என்ன ஏதுஎன்று பாராமல் உடனே அதை திறந்திருக்கிறார். திறந்த அவரின் மனநிலை எப்படியிருக்கும் என்று நீங்களே நினைத்து பாருங்கள். நடிகர் நாசர் திறந்த 200கிராம் டப்பா அல்ல அது, பெரிய வாளி,
வாளியை கொண்டுவந்தவர் வாளியிலே போய்விட்டு எடுந்து வந்திருப்பார் போல. என்ன கொடுமை.