வணக்கம் நண்பர்களே.
இந்த இடுகைக்கு ஓட்டு, பின்னுhட்டம்ல வேணாங்க - என்ன தலைப்பு இப்படியிருக்குனு பாக்கிறிங்களா? இப்படி எதிர்மறையா இருந்தாதான் உள்ளேய வர்ரீங்க
சும்மா அதிக முக்கியமில்லாததை பார்ப்போம்.
நாம் எப்போதுமே உணவு, மருத்துவத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. ஆதலால் இந்த இடுகைக்கும் அதிக முக்கியத்துவம் தரதேவையில்லை.
நான் மருந்து வாங்கும் போது மருத்துவர் சீட்டுடன் மருந்துகளை ஒப்பிட்டு பார்த்தே வாங்குவேன். ஆனால் அது அசல் நகலா என்று எப்படி தெரியும்?
எனக்கு தெரிந்த சில விடயங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
மருந்து கடைக்காரர்கள் வட்டத்தில் காமன், ஜென்ரிக் போன்ற பெயர்கள் பிரபலமானது.
காமன் அயிட்டம்
white field, spirit, liquid parafin, tinger போன்றவை இந்த லிஸ்டில் இருக்கும். இதற்கு என்று தனி டீலர்கள் இருப்பார்கள். இதனுடன் பிரபலமான மருந்துகளின் காமினேசனில் அதைப்போலவே சில மருந்துகளும் வரும். உதாரணமாக புருபன் (brufen) என்ற வலி நிவாரணி உள்ளது. இதன் காமினேசன் நேம் ஐபுபுருபன் (ibuprofen). இந்த காமினேசன் பெயரில் அதைப்போலவே காமன் அயிட்டத்திலும் மாத்திரைகள் வரும். பெரும்பாலும் வலிநிவாரணிகள், ஆன்டிபயாடிக்ஸ், பாராசிட்டமால் ஆகியவை கிடைக்கும். டானிக்குகள் வரும். இதை ஏன் மருந்துகடைக்காரர்கள் வாங்குகிறhர்கள்? இதில் அவர்களுக்கு கிடைக்கும் லாபம் அதிகம். இதை பெரிய கடைகளில் வாங்க மாட்டார்கள். சில சின்ன கடைகளில் மட்டும் வாங்குவார்கள். இதை அவர்களிடம் வியாதியை சொல்லி மருந்து கேட்கும் வாடிக்கைளயார்களக்கு பயன்படுத்துவார்கள். அடுத்து இதை வாங்குபவர்கள் பல ஆர்.ஐ.எம்.பி. மருத்துவர்கள். ரொம்ப விலை குறைவாக கிடைக்கும் இம்மருந்துகளில் என்ன இருக்கும்? வேறு மாவுத்தான் இருக்கும் போல. நாமும் மாத்திரை போட்டால் குணமடையும் என்ற அதிக நம்பிக்கையில் நம்மின் வியாதி குணமடைகிறது. சாதாரண சுரம், இருமல், சளி குணமடைகிறது. இதே பெரிய வியாதி என்றhல்?..... இதே போல் காமன்அயிட்டம் தயாரிக்கும் நிறுவனம் குடிசைத் தொழில் போல செய்வார்கள் போல. மருந்து அட்டையில் பிரிண்டாகியுள்ள முகவரியில் அவர்கள் இருப்பார்களா என்று தெரியவில்லை.
ஜென்ரிக் அயிட்டம்
இதுவும் காமன் அயிட்டம் போல ஆனால் இதை பெரிய கம்பெனிகளே தயாரிக்கின்றன. உதாரணமாக எனக்குத் தெரிந்து சிப்லா, ரான்பேக்ஸி போன்றவைகள். தனது பிராண்டுகளைப் போலவே வேறுவென்றை தாயரிப்பார்கள். ஆனால் பிராண்டைவிட இது விலை குறைவாக விற்பனையார்களுக்கு தருவார்கள். அப்படியென்றhல் அதன் தரம் எப்படியிருக்கும்.
பத்து அட்டைகள் வாங்கினால் பத்து அட்டை இலவசம் போன்ற இலவசங்களும் உண்டு. இதை மருந்துக்கடைகளில் மட்டும் பயன்படுத்துவது போய் இப்பொழுது மருத்துவர்களும் பயன்படுத்துகிறhர்கள். கிளினிக் உள்ளேயே மருந்துக்கடை வைத்துள்ளார்களே, அவங்களும் பயன்படுத்துகிறhர்கள்.
ஒரு மருந்தின் விலை 10 என்றhல் அதைப்போலவே மற்றெhன்று 3 கிடைக்கிறது என்றhல் எது உண்மை எது பொய்? 4 அல்லது 5 வருடங்களுக்கு முன்பு தினமணியில் வந்த செய்தியில், சத்து மாத்திரைகளினால் ஒன்றும் பயனில்லை என்றிருந்தது. சத்து சத்துமாத்திரைகளின் விலை திடிரென குறைந்தது. அப்ப இவ்வளவு நாளா ஏமாத்தினார்களா? இது இல்லாமல் மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் எல்லாம் இங்கு விறுவிறுப்பாக விற்பனையாகின்றது.
இதற்கெல்லாம் காரணம் நம் அரசாங்கம்தான். இதுதான் நாம் அனைவரும் சொல்லப்போவது. நாம் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அரசாங்கம் என்பதும் நம்மைப் போன்ற மனிதர்கள் நிர்வகிப்படுவதே. நாமும் அரிச்சந்திரர்கள் இல்லை. அரசாங்க வேலைக்கு பணம் கொடுத்தால் வாங்க முடியுமா என்று யோசிப்போம். நாம் சின்ன தப்பா செய்யறது, அரசயில்வாதிங்க அவங்க லெவலக்கு பெரிய தப்பா செய்றhங்க.
உடனே நான் அரசியல்வாதிக்கு ஆதரவா பேசறhன் அரசியல் வாதி என்று முத்திரை குத்திடாதிங்க.
மருத்துவத்துறையில் உள்ள குறைபாடுகளைப்போல் எல்லாவற்றிலும் உள்ளது. பல வகைகளிலும் நாம் ஏமாற்றப்படுகிறேhம். அது நம்மை பாதிக்கும் வரை அது செய்தியாகவே உள்ளது. இதற்கெல்லாம் தீர்வு, நமக்குள் ஒற்றுமை வேண்டும். நமது எதிர்ப்பினை வன்முறையில்லாத வழியில் தெரிவிக்க வேண்டும். இங்குதான் பிரச்சினையே இருக்கு. வந்தோமோ பதிவு போட்டோமா, பின்னுhட்டத்தில், என்ன செய்வது, நம்ம அரசாங்கம் அப்படியிருக்குது என்று நொந்து கொள்வோம். நானும் அதைத்தான் செய்கிறேன்.
வருங்காலத்தில் தினமும் சாப்பிடுவதைப்போல், தினசரி நடவடிக்கையாக நாமும் சாலைக்கு வந்து போராடுவோம். ஆனால், நாம் அப்போது இப்போது இருப்பதுபோல இருக்க
மாட்டோம்..
இந்த இடுகைக்கு ஓட்டு போடணும் என்றால் ஓட்டு பட்டையைக் காணுமே?
ReplyDeleteமன்னிக்கவும் சார். இப்ப ஓட்டு பட்டை நிறுவியாச்சு. வருகைக்கு நன்றி.
ReplyDeleteநல்ல இடுகை. (இது பின்னூட்டமல்ல!, Mind - voice)
ReplyDeleteஸ்ரீ....
நன்றி ஸ்ரீ
ReplyDeleteநல்ல இடுகை
ReplyDeleteதேவையான விஷ்யங்கள்.
Nice Blog.. Nice Article
ReplyDeletevery good article.
ReplyDeleteNice and Good Information thanks
ReplyDelete