வணக்கம் நண்பர்களே.
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் 29ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வரும் 13-03-2010 அன்று தொடங்குகிறது. நாட்டிய கலைஞர்கள் இறையுணர்வுடன் தங்கள் கலையை ஸ்ரீநடராஜருக்கு அர்ப்பணிக்கிறhர்கள்.
இவ்விழாவில் உலகம் முழுவதிலிருந்தும் கலைஞர்கள் பங்குபெறுகிறhர்கள். ஆண்டுதோறும் மாசி மாதம், மகாசிவராத்திரியில் இவ்விழா தொடங்கி தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெறும். இவ்வாண்டு வரும் 13ம் தேதி தொடங்குகிறது.
நம் நாட்டின் பாரம்பரியமிக்க நடனங்களான பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம், ஒடிஸ்ஸி, கதக், சத்ரியா, மணிபுரி, சாவ் போன்றவை இடம்பெறுகின்றன. ஐந்து நாட்கள் நடைபெறும்.
இவ்விழாவில் பங்குபெறும் கலைஞர்களின் விபரங்கள் கீழ்வருமாறு.
0 comments:
Post a Comment