சிபில் கபில் மன்னிக்கவும் கபில் சிபில் அவர்கள் இந்தியர்கள் அனைவரும் இந்தியை கற்க வேண்டும் என்று அறிக்கை விடுத்தார். இது தொடர்பான பல இடுகைகளும் வந்துவிட்டது. இந்த இடுகை எனது இந்தி படிப்பும் அதன்hல் ஏற்பட்ட பிகர் மன்னிக்கவும் பக்க விளைவுகளையும் உள்ளடக்கியது. தொடர்க...
டிகிரி முடித்ததும் காலையில் சும்மாத்தானே இருக்கிறேhம். ஏதேனும் கத்துக்கவேணும் என்று நினைத்தேன். தனியா போன சரிவருமா? கூட ஒரு ஆள் துணை இருக்கணுமே. நண்பனையும் துணைக்கு சேர்த்தேன். ஸ்போக்கன் இங்கிலீஸ் கிளாஸ் போலன்னா அது வேலைக்கு ஆகலே.
அப்பொழுதுதான் தக்சின் பாரத் பிரச்சார் சபாவில் இந்தி வகுப்புஎடுக்கிறhர்கள். மாசம் 20ரு]பாயில். 20 ருபாயில் ஒரு மொழி கத்து கொடுக்கறhங்களா என்று ஆச்சரியப்பட்டு அதில் சேருவது என்று முடிவு செய்தோம். எனக்கு இந்தின்னாலே வெறுப்புத்தான். 20 ரு]பாய என்றுவுடன் போய்த்தான் பார்ப்போம்என்று சேர்ந்தோம். 50 ஆண்டுகளாக இங்கு பிரச்சார் சபாவின் கிளையை நடத்திவருகிறhர்கள்.
இதை நடத்தும் ஜி ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். புதிய நோட்டு மற்றும் போனவுடன் சகிதம் வகுப்புக்கு சென்றேhம். இந்தி எழுத்துக்களைப் பற்றியும் அது எழுதும் முறைப்பற்றியும் விளக்கினார். நோட்டில் எழுதிக்கொடுத்து எழுத சொன்னார்கள். புத்தகம் வாங்கி கொள்ள சொன்னார்கள். இரண்டு நாள் சென்றது.
அப்பதான் பிரச்சினையே ஆரம்பித்தது. வகுப்பில் நாங்கள் பெரிய பசங்க. மற்றதெல்லாம் பொடிசுங்க. டேய் இப்பதான்டா அண்ணன் அ, ஆ எழுதுறhங்க, அண்ணணுக்கு படிக்கவே தெரியலைடா போன்ற பல வசனங்கள். சில சிறிசுங்க கில்லுவது, அடிப்பானுங்கோ, அடிச்சுட்டு இந்த அண்ணன் என்ன அடிக்கறிhங்கன்னு சொல்லுவாங்க பாருங்க.
வகுப்பிற்கு புதிதாக எங்கள் வயதை ஒத்த பலர் சேர்ந்தார்கள். வகுப்பு விறுப்பும், சுறுசுறுப்பும் ஆனது. என்னைவிட எனது நண்பன் இந்தியை வேகமாக பிக்அப் பண்ணினான் (எனக்கு அப்ப தெரிய இவன் வெற ஒண்ணுயையும் பிக்அப் பண்ண போறhன் என்று)
புதிய ஒரு நல்ல நண்பரும் கிடைத்தார். பிராத்மிக் பரிட்சை வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு எனக்கு டைபாய்ட் வந்தது. இதனால் வகுப்பிற்கு செல்ல இயலவில்லை. ஆனால் என் நண்பன் விடவில்லை.
நாமதான் கொஞ்சம் விபரமாச்சே, டேய் ஏதவாது பிரச்சினையின்னா எனக்கு தெரியாது. யாராவதுஏதும் கேட்டால் நீ யாருன்னு தெரியாதுன்ன சொல்லிடனே; என்றேன். 3 வருடங்கள் சென்றது. அவர்களின் காதல் இந்தியைவிட அதிகமானது. நான் வகுப்புக்கு செல்வதைவிட்டு விட்டேன். போதுண்டா படிச்சது என்று செர்ல்லிட்டேன். அவர்கள் வகுப்பு செல்வதை நிறுத்தினதே கிடையாது.
கொஞ்ச கொஞ்சமாக வெளியே இவரது காதல் தெரிய ஆரம்பித்தது. மற்ற நண்பர்கள் காதலைப் பற்றி கேட்டதற்கு நமது நண்பர் ஒரு வார்த்தை சொன்னார் பாருங்க... நான் சும்மாத்தான் இருந்தேன். விஜிதான்டா இங்கு ஆச்சிட்டுவந்தான். இல்லைன்னா நான் பாட்டிற்கு சும்மாஇருந்திருப்பேன்னு சொன்னதுதான் எல்லாரும் என்னை பிடிச்சுட்டானுங்க. டேய் நீதாண்ட இவங்க காதலுக்கு தண்ணி ஊத்தி வளத்திருக்க, பின்னாடி பிரச்சனைன்னா நீதான் பொறுப்புன்னாங்க. நான் பல தடவை சொல்லியும் அவன் கேக்ல அதுக்கு நான் என்னடா பண்றது, நான் சுடுதண்ணீரைதான்டா ஊத்தினேன். இதுக்கு நான் பொறுப்பில்ல என்று சொல்லியும் எவனும் கேட்ட மாட்டேங்கிறhனுங்க.
இருவரின் வீடடிற்கும் தெரிந்தது. வருடம் 7 ஆனது. இருவர் வீட்டின் பெரியவர்களும் பேசி இப்பத்தான் 3 மாசத்துக்கு மன் திருமணம் நல்ல படியாக முடிந்தது. இதிலிருந்து எங்க போனாலும் தனியாத்தான் போகனும், கூட்டு சேர்க்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேங்க. ப்பா. இந்தின்னாலே பிரச்சினைதான் போலிருக்கு.
எங்க போனாலும் காதல்தானா?
ReplyDeleteகாதல் காதல் காதல் ...
காதல் காதல் காதல் ...
வருகைக்கு நன்றி வசந்த். வகுப்புக்கு வருவதே பாதி பேர் கடலை போடுவதற்கே.
ReplyDeleteகாதல் தான் சுபத்தில் முடிந்து விட்டதே... பிறகென்ன!
ReplyDeleteஒருவேளை பிரச்சனை ஆகியிருந்தால், உங்கள் வாயில் வடை சுட்டு வெங்காய பஜ்ஜி போட்டிருப்பார்ர்கள். இந்த அனுபவம் எனக்கிருக்கிறது!